இந்திய அணியின் நிலையான கேப்டனை கண்டறிய ஐபிஎல் உதவும்

இந்திய அணியின் நிலையான கேப்டனை கண்டறிய ஐபிஎல் உதவும்
இந்திய அணியின் நிலையான கேப்டனை கண்டறிய ஐபிஎல் உதவும்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஐபிஎல்லில் மீண்டும் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இந்நிலையில் அவர்  அளித்த பேட்டி: ஐபிஎல்லில் நான் 11 சீசன்களில் வர்ணனையாளராக பணியாற்றி  உள்ளேன். பின்னர் சில முட்டாள்தனமான விதியின்(இந்திய அணியின்  பயிற்சியாளராக இருந்ததால் ஐபிஎல்லில் பங்களிக்க தடை உள்ளது) காரணமாக சில  சீசன்களில் பணியாற்ற முடியவில்லை, என்றார்.

மேலும் கோஹ்லி  இனி இந்திய அணியின் கேப்டனாக வரமுடியாது. ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பை  அற்புதமாக செய்து வருகிறார். எதிர்காலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்  பன்ட், கே.எல். ராகுல் கேப்டன் வாய்ப்பில் உள்ளனர். வருங்காலத்துக்கு  நிலையான ஒரு கேப்டனைத்தான் இந்தியா எதிர்பார்க்கும். அதை கண்டறிய 15வது  ஐ.பி.எல். தொடர் உதவிகரமாக இருக்கும், என்றார்.