நியூயார்க் நகர மக்களை வசீகரித்த சூரிய அஸ்தமனம்
நியூயார்க்: சூரிய உதயமும், அஸ்தமனங்கலும் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்கையில் ஒரு கணம் அமைதிப்படுத்தக் கூடியவை. அந்த மன அமைதியைதான் நியூயார்க்கின் பகுதிவாசிகள் நேற்று கடத்திருக்கிறார்கள். நியூயார்க்கின் பரப்பரப்பான வீதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டிடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன். இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளா காட்சியை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.
காரணம்... மன்ஹாட்டனின் பிரமாண்ட உயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பிரமாண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. சிவப்பு - ஆரஞ்சு நிற வண்ணத்தால் வண்ணமிடப்பட்ட வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டிங்களின் மத்தியில் கீழ் சென்று கொண்டிருந்தது.
இதனால் மன்ஹாட்டனில் சூரியன் மறையும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. பூமி எப்போதும் நேராக சூழல்வது இல்லை. 23 டிகிரி அச்சில் சாய்வாகதான் பூமி சூழல்கிறது. இதனால்தான் நாம் பருவ மாறுதல்களை மாறி மாறி சந்திக்கிறோம். இவ்வாறு சாய்வாக சுழலும்போது உலக நாடுகளில் சில பகுதிகளில் சூரியனின் அஸ்தமனங்களும், உதயங்களும் இவ்வாறு பிரமாண்டமாக கண்கொள்ளா காட்சியாக அமைவது உண்டு வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இம்மாதிரியான சூரிய அஸ்தமனம் ஜூலை மாதம் மீண்டும் நிகழும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.