வேலம்மாள் வித்யாலயா மற்றும் பிளாக் ஷீப் இணைந்து நடத்தும் COVID KILLER KID மாறுவேடப்போட்டி!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமெல்லாம் அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவ மாணவியர் தங்கள் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தினசரி பொழுதுபோக்க செய்வதறியாது திகைத்த நிலையில்தான் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஆன்லைன் வகுப்புகளிலும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் முன்னிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்கள் தவிர, அவர்களை உற்சாகப்படுத்த கலை நிகழ்ச்சிகள், ஓவியப் போட்டிகள், நேரலை இன்னிசை நிகழ்ச்சி என்பன போன்ற இணையவழி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டன. இவைகளிலும் மாணவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டு பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.
அந்த வகையில், வேலம்மாள் வித்யாலயாவும் பிளாக் ஷீப் நிறுவனமும் இணைந்து மாறுவேடப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, 12 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் தங்களது வீடுகளில் இருந்துகொண்டு மாறுவேடமிட்டு நடித்து, அதனை வீடியோவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வீடியோ பதிவை 6381628250 என்கிற எண்ணுக்கு வாட்சப் மூலம் பகிரவேண்டும். அவ்வாறு அனுப்பும் பதிவுகள் வித்தியாசமாக இருந்தால் அவர்களுக்குப் பரிசுகள் நிச்சயம்.
மாணவச் செல்வங்களே உற்சாகத்தோடு பங்குபெறுங்கள், வெற்றி வாகைச் சூடுங்கள் என வேலம்மாள் வித்யாலயா தங்களை வாழ்த்தி வரவேற்கிறது.