வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்மத்தில் குழந்தைகள் தனித்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்மத்தில் குழந்தைகள் தனித்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன

நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் அச்சத்தால் மக்கள் அனைவரும் வீடுகளில் தஞ்சம் கொண்டுள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்மத்தில் ப்ரீ கேஜி முதல் 2ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகள் ஏப்ரல் 24 முதல் 29 வரை இணையம் வழியாக நடைபெற்றது.
தங்களது கனவுகளை வண்ணங்களாகத் தீட்டுதல், முகக்கவசம் தயாரித்தல், பல குரலில் பேசுதல் போன்ற போட்டிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது கற்பனைத் திறனை வெளிப்படுத்தினர். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்ட இப்போட்டியில், ஐநூறுக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கான பரிசுகள் அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் இவ்வித்தியாசமான முயற்சியைப் பெற்றோர்களும் மாணவர்களும் வெகுவாகப் பாராட்டினர்.