“நம்மால் முடியும்”

“நம்மால் முடியும்”
“நம்மால் முடியும்”
“நம்மால் முடியும்”

“நம்மால் முடியும்”

 

பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளும் செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பயணம்தான் புதிய தலைமுறையின் நம்மால் முடியும் நிகழ்ச்சி.

 

கிராமங்கள்தோறும் பயணித்து, பிரச்னைகளைக் கண்டறிந்து, அந்தந்த கிராமத்தின் பிரதிநிதிகள்,பொதுமக்கள், தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு களத்தில் பணியாற்றி, தீர்வுக்கான வழியும் காட்டி வருகிறது நம்மால் முடியும் நிகழ்ச்சி. இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட  நீர்நிலைகளை மேம்படுத்தி பயணித்து வரும் இந்நிகழ்ச்சியின் அடுத்த முன்னெடுப்பாக மாவட்டங்கள் தோறும் உள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வை நோக்கிச் செல்ல தொடங்கியுள்ளது புதிய தலைமுறை.

 

முதற்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவது என முடிவு செய்து அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள நம்மால் முடியும் நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கும் மறுஒளிபரப்பு ஞாற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை பூங்குழலி தொகுத்து வழங்குகிறார்.