சீனாவில் இருந்து திருவாரூர் திரும்பிய ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகம்

சீனாவில் இருந்து திருவாரூர் திரும்பிய ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகம்

சீனாவில் இருந்து திருவாரூர் திரும்பிய ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் அசோக்குமார்( 33). சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31ம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக ஊர் திரும்பி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சளி தொந்தரவு காரணமாக அருகே உள்ள ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சோதனை செய்து பார்த்த பின் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மேல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை தனி வார்டில் அனுமதித்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று இவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முககவசம் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.