2020-21 நிதியாண்டின் தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

2020-21  நிதியாண்டின் தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நிதிநிலை அறிக்கையை அவர் வாசித்து வருகிறார். 

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி: ஓபிஎஸ்

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடியாக உள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 


தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.2,19, 375 கோடி.

* தமிழகத்தின் மொத்த செலவு ரூ.2,41.601 கோடி 
* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.22,225 கோடி. 
* 2018-19 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.17% வளர்ச்சி. 
* 2019-20 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%
* இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 5% அதிகம்.
* வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உயர் கல்வித்துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.520.13 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார்.

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு

தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் அறிவித்தார். 

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு.


ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

சென்னை- பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்

நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

நீதி நிர்வாகத்திற்கு 2020-2021 பட்ஜெட்டில் 1,403.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.