மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

மத்திய உயர்கல்வித் துறை செயலாளர்  டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்றும், ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பள்ளி வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் காரே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும், கல்லூரி வகுப்புகள் தொடங்குவது தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.