தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக இன்று 6,352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகளவாக சென்னையில் 1,285 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,15,590 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் 6,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர்.