கனமழையால் பல்கலை. தேர்வுகள் ரத்து: துணை வேந்தர் அறிவிப்பு

கனமழையால் பல்கலை. தேர்வுகள் ரத்து: துணை வேந்தர் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றாலும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என அப்பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் இன்று நடத்த திட்டமிட்டிருந்த தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது