வலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில் 10 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்த மாணவர்கள்

வலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில் 10 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்த மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 10 ஆயிரம் விதைப் பந்துகளை ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் தயாரித் தனர்.

நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 141 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. இதன் மூலம் மரக்கன்று வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், மரம் வளர்ப்பில் மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவித்து, பாடவேளை முடிந்தபின் விதைப் பந்துகள் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தினர். அதன்படி, 10 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர். அவர்களுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அகமதாபாத்தில் நடைபெற்ற டிஎப்சி  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில், பள்ளியின் தலைமையாசிரியர் ராஜகுமாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த இயற்கை பாதுகாப்பு சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளர் அறிவியல் ஆசிரியர் சுந்தரமூர்த்தி கூறிய தாவது:

பள்ளி வளாகத்தில், தேக்கு, புங்கன், மலைவேம்பு, நெல்லி, கொய்யா என 25 வகை யான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றை மாணவர் களுடன் இணைந்து பராமரித்து வருகிறோம். இதன் தொடர்ச் சியாக 10,000 விதைப் பந்துகள் தயாரித்துள்ளோம். விதைப் பந்துகள் தேவைப்படுவோர் பள்ளியை அணுகலாம் என்றார்.