மெரினாவில் கொலை: போலீசார் விசாரணை
சென்னை மெரினா கடற்கரையில் இன்று (நவ. 07) மக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி என தெரியவந்துள்ளது. கொலையாளிகளைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.




