தொழிலாளர்களுக்கு 10 மில்லியன் டாலரை போனஸாகக் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர்..!?

தொழிலாளர்களுக்கு 10 மில்லியன் டாலரை போனஸாகக் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர்..!?
தொழிலாளர்களுக்கு 10 மில்லியன் டாலரை போனஸாகக் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர்..!?
தொழிலாளர்களுக்கு 10 மில்லியன் டாலரை போனஸாகக் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர்..!?

மேரிலாண்டில், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் எட்வர்ட் என்பவர் தனது ஊழியர்களுக்கு $50,000 டாலர்களை ஆண்டு போனஸாக வழங்கப்போவதாக கூறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்!
செயின்ட் ஜான் ப்ரொபேர்ட்டிஸ் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புகளை பெற்றுள்ளது. அந்நிறுவனம். சமீபத்தில் 20மில்லியன் சதுர அடி அலுவலகம், சில்லறை விற்பனை, கிடங்கு போன்றவற்றை 8 மாநிலங்களில் நிறுவியதை தொடர்ந்து,அதன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, எட்வர்ட் செயின்ட் ஜான் தனது ஊழியர்களுக்கு ஒரு விருந்தொன்றை ஏற்பாடுசெய்திருந்தார். அப்போது நடந்த பார்ட்டியின் போதுதான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எட்வர்ட்.

தனது அலுவலகத்தில் உள்ள 198 ஊழியர்களுக்கும் 10 மில்லியன் டாலர்களை ஊதியமாக வழங்கவிருப்பதாக அறிவித்தார்! இதனை கேட்ட ஊழியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதுபற்றி எட்வர்ட் கூறியதாவது,"எனது ஊழியர்களின் வாழ்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் விதமாக அப்படி ஒரு போனஸை தர விரும்பினேன். இந்த வெற்றிக்கு காரணமான ஊழியரக்ளுக்கு எனது நன்றிகள், அவர்களின் உழைப்பும்,அர்ப்பணிப்பும்தான் இந்த வெற்றிக்கு காரணம்! நான் இந்த வெற்றியை எட்ட 40 ஆண்டுகளாகுமென நினைத்தேன் ஆனால் இது வெறும் 14ஆண்டுகளில் நடந்துவிட்டது" இவ்வாறு கூறினார்.

போனஸ் அறிவிப்பின் பொது எடுக்கப்பட்ட வீடியோவில் 19 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் கணக்கு நிபுணராக இருந்த டேனியல் வலென்சியா கண்கலங்கி கூறியது,"இது மிகவும் ஆச்சர்யமானதும் தாராளமானதுமக இருக்கிறது, வாழ்க்கையை மாற்றும் ஓன்று" இவ்வாறு கூறி அழுதார்.