அயோத்தி வழக்கில் 13ம் தேதி தீர்ப்பு! நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

அயோத்தி வழக்கில் 13ம் தேதி தீர்ப்பு! நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் வழக்காக உள்ளது அயோத்தி வழக்கு. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பானது வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். ஆதலால் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளார்.

தீர்ப்பு வெளியாகும் நாளில் அசம்பாவிதம் எதுவும் நடைபெற கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இதன் காரணமாக இந்தியா முழுவதும் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருகுபதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.