கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் 400க்கும் அதிகமான வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
பிரான்ஸ்: வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு... பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சேம்ஸ் எலிஸிஸ் பகுதியில் கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
400-க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த வண்ண விளக்குகளை நடிகை Ludivine Sagnier, பாரீஸ் மேயர் ஆனி ஹிடல்கோ உட்பட அதிகாரிகள் ஏற்றி வைத்தனர்.
அலங்காரத்திற்கு எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குறைந்தளவு மின்சாரமே தேவைப்படுகிறது என தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை வண்ண விளக்குகள் தொடர்ந்து எரியும் என கூறியுள்ளனர்.