ரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..!

ரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு  மாற்றம..!

தமிழ்நாடு இசை,கவின் கலைக்கல்லூரியில் பதிவாளராக பணியாற்றிவந்த ஐ.ஏ.எஸ் ரோஹினி மத்திய அரசின் உயர்கல்விதுறை துணைச் செயலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.2017 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ரோஹினி ஐ.ஏ.எஸ் குறுகிய காலத்தில் பிரபலமானார். இதனால் ஊடகத்தின் பார்வை இவரது பக்கம் அதிகமாக திரும்பியது.

பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின் போது சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகவும் செயல்பட்டார் ரோகினி ஐ.ஏ.எஸ். கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு இசை கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக ரோகிணியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இந்த பதவியில் பணியாற்றிய ரோகினி மீண்டும் மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.