2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்: ராதாகிருஷ்ணன்
சென்னை :அடையாறு ஆற்றை தூர்வாரும் பணி 2020 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு ஆற்றை தூர்வாரும் பணியினை பேரிடர் மேலாண்மை ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அடையாறு ஆற்றில் ரூ.94.76 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும், திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை தூர்வாரும் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலப்பது மக்கள் தான் என தெரிவித்த அவர், மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், 2020 டிசம்பருக்குள் அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நிறைவடையும் என்றும் குறிப்பிட்டார்.