ரியல்மீ P4x, அதிவேகமான 7000mAh திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் ரியல்மீ வாட்ச் 5 இந்தியாவில் முறையே ரூ 13,499* மற்றும் ரூ. 3,999* தொடக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ரியல்மீ P4x, அதிவேகமான 7000mAh திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் ரியல்மீ வாட்ச் 5 இந்தியாவில் முறையே ரூ 13,499* மற்றும் ரூ. 3,999* தொடக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட், மிகப்பெரிய 7000எம்ஏஎச் டைட்டன் பேட்டரி, 144Hz சன்லைட் டிஸ்ப்ளே, மேம்பட்ட ஏஐ திறன்கள் ஆகியவற்றுடன் ரியல்மீ P4x அதன் பிரிவில் அதிவேக செயல்திறனை அறிமுகப்படுத்துகிறது.
- ரியல்மீ வாட்ச் 5 என்பது பிராண்டின் புதிய “மேக் இன் இந்தியா” ஸ்மார்ட்வாட்ச், இதில் பெரிய அமோஎல்ஈடி டிஸ்ப்ளே, தனித்துவமான GPS, நீண்ட பேட்டரி ஆயுள், 108 ஸ்போர்ட்ஸ் மோடுகள், HD கால் வசதி மற்றும் மேம்பட்ட மெட்டாலிக் வடிவமைப்பு வழங்கப்படுகிறது.
- ரியல்மீ P4x-ன் முதல் விற்பனை டிசம்பர் 10, மதியம் 12 மணி (IST) முதல் 12 மணி நேரத்திற்கு மட்டுமே realme.com, Flipkart மற்றும் மெயின்லைன் சேனல்களில் ரூ. 2,500 வரையிலான சலுகைகளுக்குப் பிறகு ரூ. 13,499* தொடக்க விலையில் நடைபெறும்.
- ரியல்மீ வாட்ச் 5-ன் முதல் விற்பனை டிசம்பர் 10, மதியம் 12 மணி (IST) முதல் realme.com, Flipkart மற்றும் மெயின்லைன் சேனல்களில் ரூ. 500 விலை குறைவுக்குப் பிறகு ரூ. 3,999* தொடக்க விலையில் ஆரம்பமாகும்.
-
இந்தியாவில் மிகவும் பரிந்துரைக்கப்படும் இளைஞர்களின் ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ P சீரிஸ், இன்று தனது ஸ்மார்ட்போன் மற்றும் AIoT தொகுப்பை வலுப்படுத்தும் நோக்கில், தனது பிரிவில் அதிவேக 7000mAh திறனைக் கொண்ட ரியல்மீ P4x மற்றும் ரியல்மீ வாட்ச் 5 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. ஆப்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (OEL) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த “மேக் இன் இந்தியா” ஸ்மார்ட்வாட்ச் மற்றும் P சீரிஸின் புதிய மாடல் ஆகியவை, அன்றாட சக்திவாய்ந்த செயல்திறன், பயனுள்ள ஏஐ திறன்கள், மற்றும் வடிவமைப்பு முன்னுரிமையுள்ள புதுமைகளை வழங்கும் ரியல்மீ-யின் இலக்கைப் பிரதிபலிக்கின்றன.
ரியல்மீ P4x மூலம் சிப்செட் திறன், நீடித்த பேட்டரி, மற்றும் ஏஐ மூலமான உற்பத்தித் திறன் ஆகியவற்றில் முக்கிய முன்னேற்றங்களை ரியல்மீ கொண்டு வருகிறது. பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும், படிக்கும், விளையாடும் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கும் இளைஞர்களுக்காக இந்த சாதனம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரியல்மீ வாட்ச் 5 புதிய சிறப்பான வடிவமைப்பில் உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைக் மேம்படுத்துவதோடு மேக் இன் இந்தியாவுக்கு ரியல்மீ-யின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இந்த வெளியீடுகள், இந்தியாவை மையமாகக் கொண்டு, உலகளவில் போட்டியிடக்கூடிய தொழில்நுட்ப சூழலை உருவாக்கும் ரியல்மீ-யின் தொடர்ச்சியான உத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
ரியல்மீ P4x தனது பிரிவில் முன்னணி செயல்திறனை டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப் செட், 90 FPS கேமிங், மற்றும் GT பூஸ்ட் உடன் வழங்குகிறது, இதன் மூலம் மென்மையான மற்றும் நிலையான கேமிங் அனுபவம் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் 7000mAh டைட்டன் பேட்டரி 45W ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் நிமிடங்களில் பல மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது. பைபாஸ் சார்ஜிங் அம்சம் மற்றும் உலோக VC கொண்ட ஃப்ரோஷன் கிரவுன் கூலிங் சிஸ்டம் மூலம் CPU வெப்பநிலையை 20°C வரை குறைக்க முடியும். இந்த சாதனம் 18GB வரையிலான டைனமிக் ராம், UFS 3.1 சேமிப்பு, 1000 நிட்ஸ் பிரகாசத்துடன் கூடிய 144Hz சன்லைட் டிஸ்பிளே, இரட்டை ஸ்பீக்கர்கள், 50MP AI கேமரா, 4K வீடியோ மற்றும் மேம்பட்ட AI கருவிகள் ஆகியவற்றை வழங்குகிறது. வான்வெளித் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பில் மூன்று வண்ணங்களில் கிடைக்கும் ரியல்மீ P4x, பவர், ஸ்டைல் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் தன்மையை புதிய தலைமுறையினருக்கு வழங்குகிறது. அதே சமயத்தில் இதே விலை கொண்ட சாதனங்களில் மிக உயர்ந்த மதிப்பை வழங்கும் ஒன்றாகவும் இது திகழ்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்: ரியல்மீ P4x – அதிவிரைவான 7000mAh திறன்
டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி செயல்திறன்
ரியல்மீ P4x, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட்டால் இயங்குகிறது. இது 780,000-க்கு மேற்பட்ட AnTuTu மதிப்பெண் பெற்று, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளை ஒரே நேரத்தில் மாற்றிச் செயல்படுத்தும்போதும் மென்மையான மற்றும் திறமையான செயல்திறனை வழங்குகிறது. 4nm வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த சிப்செட், சிறந்த மின்திறன் மேலாண்மையை வழங்குவதுடன், BGMI மற்றும் COD போன்ற முக்கிய தலைப்புகளில் 90 FPS கேம்ப்ளேயை வழங்குகிறது. புதிய GT பூஸ்ட், நீண்ட நேர கேமிங் விளையாட்டிலும் நிலையான ஃப்ரேம் வீதத்தை தக்கவைக்க உதவுகிறது. மேலும், BGMI-யில் 90 FPS மற்றும் ஃப்ரீ பயரில் 120 FPS ஆதரவை வழங்கும் தனது பிரிவில் ஒரே சாதனமாக ரியல்மீ P4x திகழ்கிறது, இது கேம் விளையாடுபவர்களுக்கு சிறந்த போட்டி முன்னிலையை வழங்குகிறது.
7000mAh டைட்டன் பேட்டரி + 45W விரைவான சார்ஜ்
இந்த ஸ்மார்ட்போன் மிக அதிகமான் 7000mAh டைட்டன் பேட்டரியையும், 45W விரைவான சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது. 5.5 நிமிட நேர சார்ஜில் 2 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பார்க்கலாம்; அல்லது 6 நிமிட நேர சார்ஜில் 1 மணி நேர BGMI கேம்ப்ளே செய்யலாம்; மேலும் முழுமையான சார்ஜில் 25.5 மணி நேரம் இன்ஸ்டாகிராமில் இருக்கலாம். பைபாஸ் சார்ஜிங் மூலம் வெப்பம் குறைகிறது, அத்துடன் கேமிங்கின் போது நிலைத்தன்மையும் பேட்டரி ஆயுட்காலமும் மேம்படுகின்றது.
ஃப்ரோஸ்ட்கோர் கூலிங் சிஸ்டம்
இந்த சாதனம் தனது பிரிவிலேயே ஒரே வாபர் சேம்பர் கூலிங் சிஸ்டத்தை ஸ்டீல் பிளேட்டுடன் வழங்குகிறது. இது 5300mm² VC உடன் மொத்த போனின் 41 சதவீதப் பகுதியை மூடுகிறது; இது CPUவின் வெப்பநிலையை 20°C வரை குறைக்கிறது; மற்றும் காப்பர்–கிராஃபைட் குளிரூட்டலும், 10 துல்லியமான சென்சார்களும் அதிக சுமை கொண்ட செயல்பாடுகளின் போது தொடர்ந்து சீரான செயல்திறனைத் தக்கவைக்க உதவுகின்றன.
18GB டைனமிக் ராம் + UFS 3.1 ஸ்டோரேஜ்
ரியல்மீ P4x அதிகபட்சமாக 18GB டைனமிக் ராம் (8GB ஆன்போர்டு + 10GB டைனமிக்




