டி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது - ஷேன் வாட்சன் !!

டி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது - ஷேன் வாட்சன் !!

கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஷேன் வாட்சன் அளித்த பேட்டியில், ” சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தேன். தமிழகத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியால் ஏராளமான வீரர்களின் திறமை வெளிஉலகுக்கு தெரிந்துள்ளது. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கிறது. தமிழக கிரிக்கெட் அணி நன்றாக முன்னேறி வருகிறது ” என்று கூறினார்.