சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை
வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள்கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் 1.5 கி.மீ. வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது
மீனவா்கள் அக்டோபா் 17, 18 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், சேப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஆங்காங்கே தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.