பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மக்கள் தங்கள் பயணத்திற்கு அதிகளவில் மெட்ரோ ரயில் சேவைகளை நாட துவங்கியுள்ளதால், அவர்களின் வசதிக்காக வார நாட்களில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரத்தக்க செய்தியாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய நிலையில் புளூ லைன் ( வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் வழி எல்ஐசி) வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறையும் கிரீன் லைன் ( சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை ) வழித்தடத்தில் 14 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோவில், தினசரி 1 லட்சம் மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 26ம் தேதி முதல் வார நாட்களில் ( காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை) புளூலைன் வழித்தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில், கிரீன்லைன் வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

மக்கள் நெருக்கடி அதிகமில்லாத மற்ற நேரங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதிநாட்களில் வழக்கம்போல புளூலைன் தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறையும், கிரீன்லைன் தடத்தில் 14 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்படடுள்ளது.