பள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை

பள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை

சென்னை: பள்ளிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

30 பள்ளிகளின் சார்பில் 60 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். பள்ளிகளில் தேவையான அளவு காவலாளிகளை நியமிக்க வேண்டும். பள்ளிகள் முன்பு உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை, பள்ளி உள்ள பகுதி என்ற பெயர் பலகைகளை எழுதி வைக்க வேண்டும்.

பள்ளி காவலாளிகளை கொண்டு,பள்ளி வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க, பள்ளி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.

பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்களை, பள்ளி வளாகத்தில் நிறுத்திதான் குழந்தைகளை இறக்கிவிட வேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தி குழந்தைகளை ஏற்றி, இறக்கி விடக்கூடாது.