தமிழக உள்ளாட்சித் தேர்தலின் வாக்காளர் பட்டியல் வெளியீடு...
கடந்த 3 வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், திமுக கட்சித் தலைவர் முக ஸ்டாலின் இந்த ஆண்டு கட்டாயமாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் மனு அளித்தார். அதனை விசாரித்த நீதி மன்றம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து, மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுமென்று அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
அதன் படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மேலும், வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.