உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம் .!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கி இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளதால் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
மேலும், இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
Indian Team Top Of Test Match Series : இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.