கேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க முடிகிறது - இந்திய கேப்டன் விராட் கோலி

கேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க முடிகிறது - இந்திய கேப்டன் விராட் கோலி

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், 'டெஸ்டில் 7 இரட்டை சதங்கள் அடித்தது குறித்து கேட்கிறீர்கள். நான் சில தினங்களுக்கு முன்பு சொன்னது போல கேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க முடிகிறது.

இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்குடன் களம் இறங்கினால் அதை அடைய முடியாது. அணிக்காக 5 பகுதிகள் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினால் இரட்டை சதம் தானாக வந்து சேரும். இந்த மனநிலையுடன் ஆடுவதால் தான் என்னால் பெரிய ஸ்கோர் குவிக்க முடிகிறது.

ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட ஆட்டம் மீது அதிக கவனம் செலுத்தி விளையாடினேன். அதனால் எனக்குள் நெருக்கடி தான் உருவானது. ஆனால் அணி குறித்து சிந்தித்து விளையாடத் தொடங்கியதும் எல்லா நெருக்கடியும் விலகி போய் விட்டது. உள்நாட்டில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை வென்றது சிறப்பான விஷயம். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் இருப்பதால் ஒவ்வொரு டெஸ்டும் மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டுள்ளோம். அதனால் கடைசி டெஸ்டில் எந்த வகையிலும் ரிலாக்சாக இருக்க மாட்டோம். இதே உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெறுவதை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார்.