பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக திகழ்கிறது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக திகழ்கிறது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

உலகில் பிற நாடுகளைவிட முதலீட் டுக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ் கிறது என்று மத்திய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஜனநாயக நாடாகவும், முதலீட் டாளர்களை மதிக்கும் சூழல் உள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் சற்று கால அவகாசம் பிடிப்பவையாக இருந்தாலும், வெளிப்படையான சமூகமாக இந்தியா திகழ்கிறது. ஏற்கெனவே பல்வேறு சீர் திருத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை நீக்குமாறு முன்னணி நிறுவனங்கள் வலியுறுத் துகின்றன. அதற்கு முன்பாக இந்தத் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது தெரிந்தால் அதன் பிறகு வரம்பை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

மேலும், இந்த விஷயத்தில் தான் திறந்த மனதுடன் செயல்படு வதாகவும், இத்துறையினரின் எதிர்பார்ப்புகளை விரிவாக தெரி வித்தால் அது பரிசீலிக்கப்படும். தற் போதைக்கு இது தொடர்பாக எவ் வித உத்தரவாதத்தையும் தர முடியாத நிலையில் உள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தொழில்துறையினரின் பிரச் சினைகளை வாராந்திர அடிப்படை யில் பரிசீலித்து வருவதாகவும், அனைத்து துறையினரின் பிரச் சினைகளுக்கு உரிய தீர்வை காண் பதில் அக்கறையுடன் செயல்படு வதாகவும் தெரிவித்தார்.