மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் !!
இந்தியா – வங்காளதேச அணிகள் மோதவுள்ள முதல் டி20 போட்டி வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதனால் இந்தியா வந்த வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு உள்ளதால், வங்காளதேச வீரர்கள் சிலர் மாஸ்க் அணிந்தபடியே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.