ஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

ஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 3 மாதங்களாக ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காஷ்மீரில் இரு தடங்களில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஸ்ரீநகர் – பாரமுல்லா இடையேயான வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை ரயில் சேவை தொடங்க உள்ளது. ஸ்ரீநகர் – பனிகால் வழித்தடத்தில் சில நாள்களில் ரயில் சேவை தொடங்கும்" என்றனர்.