வதந்திகள் பரப்ப வேண்டாம்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்

வதந்திகள் பரப்ப வேண்டாம்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்

சென்னை ஐஐடி நிர்வாகம் தொடர்பாக வதந்திகள், அவதூறுகளை பரப்ப வேண்டாம் என்று ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், ' மாணவி பாத்திமாவின் தற்கொலை வேதனை தருகிறது; மாணவியின் மரணம் துரதிருஷ்டவசமானது. மாணவி உயிரிழப்பு தொடர்பான தகவல் கிடைத்தவுடன் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணைக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தருகிறது. விசாரணை முடியும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனம் மீது அவப்பெயர் ஏற்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்களின் மன, உடல்நலனை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'