IND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம் பேட்டிங்

IND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம் பேட்டிங்

இந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும், டிக்ளேர் என இந்திய கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இன்று ஒரு பந்து கூட இந்திய அணி ஆடவில்லை. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை வங்கதேச அணி ஆடி வருகிறது. இந்த அணியை விட இந்தியா 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியை பொறுத்த வரை மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து 243 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இது அவரின் இரண்டாவது இரட்டை சதமாகும். அதேபோல சர்வதேச டெஸ்ட் போட்டியில் மூன்றாவது சதமாகும். மறுமுனையில், அஜின்கியா ரஹானே ரன்களும், சேடேஷ்வர் புஜாரா 54 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். ரவீந்திர ஜடேஜா 60(76) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

நேற்றை நிலவரப்படி, இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்தது. ஜடேஜா* 60(76), உமேஷ் யாதவ்* 25(10) ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இன்று தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆடும் என ஏதிர் பார்க்கப்பட்ட நிலையில், டிக்ளேர் அறிவித்தது.

நேற்று பந்து வீச்சை பொறுத்த வரை வங்கதேச அணியின் அபு ஜெயத்  4 விக்கெட்டும், எபாதத் ஹொசைன் மற்றும் மெஹிடி ஹசன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.