சென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பகுதி அலுவலகம் 9க்குட்பட்ட உதவிப் பொறியாளர் அலுவலகம், பணிமனை 114, தற்போது எண் 2, சுபத்திராள் தெரு, சென்னை 600 005 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை புதுப்பிக்க உள்ளதால் இன்று முதல் பணிமனை 114 அலுவலகம், எண் 17, ஜானி ஜான்கான் தெரு, ராயப்பேட்டை, சென்னை 600 014 என்ற முகவரியில் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்துதல் சம்மந்தமாக இந்த முகவரியில் உள்ள அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு உதவிப் பொறியாளர் 114 - 8144930114 என்ற செல்போன் எண்ணிலும், துணை பகுதி பொறியாளரை 8144930227 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.