வெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்
இந்தியா முழுவதும் வெங்காயம் வரத்து குறைந்து இருக்கிறது. இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசு அதிக அளவில் வெங்காயத்தை இருப்பு வைத்து, அதில் இருந்து வினியோகித்து வந்தது. தற்போது உள்நாட்டு தேவையை சமாளிக்கவும், அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                        
                    
                    


        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        