நேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு

நேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு

நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து கிட்டத்தக்க 200 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது தனுசா மாவட்டம்.இம்மாவட்டதில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்குள்ள மக்கள் பதட்டத்தில் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.