25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை !!
இந்த ஆண்டு வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. பீகார், உத்தர பிரதேசம், குஜராத், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பெய்த மழையில் சிக்கிய சுமார் 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ரெயில் மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழைப் பொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.