மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் #அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.!!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் #அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.!!!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டுவிட்டரில் #அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இன்றைய நாளில் ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். இதன்படி, இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இணையவாசிகள் #அம்மா என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, இந்த #அம்மா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் #அம்மா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.
அதிமுக அறிக்கை:
மறைந்த முதல்வர் ஜெயலிலதா நினைவு நாள் தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: டிசம்பர், 5, அதிமுக தொண்டர்களுக்கு கருப்பு நாள். நம்மை வழிநடத்தும் ஜெயலிலதா நம்மைவிட்டு விடைபெற்ற இந்நாளில் தான், அவர் தம் நீங்காத நினைவுகளில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலக தமிழினமே ஆழ்ந்திருக்கிறது. தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம், பெண் கமாண்டோ படை, தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா அரிசி, அம்மா உணவகம், மருந்தகம், குடிநீர், தாய்மார்கள் பாலூட்ட தனியறைகள், அளித்தவர். ஜெயலலிதா மறைந்த நாளில் அவர்தம் திருவுருவப் படத்திற்கு மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி வைப்வோம் என்று குறிப்பிப்பட்டது.