இயற்கை பாதுகாப்பு குறித்து  உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..!

இயற்கை பாதுகாப்பு குறித்து  உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..!
இயற்கை பாதுகாப்பு குறித்து  உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..!

இயற்கையை பாதுகாப்பது தொடர்பான பாடத்தை 40 நிமிடங்கள் தொடர்ந்து கவனித்து அழகப்பா பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளியில் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நடுவர் விவேக், அழகப்பா பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 1714 மாணவர்கள் கலந்துகொண்டு 40 நிமிடங்கள் இயற்கையை பாதுகாப்ப்து குறித்த பாடத்தை கவனித்து புதிய உலக சாதனையை படைத்தார்கள். 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக்,

இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த உலக சாதனை முயற்சி அழகப்பா பள்ளியில் நடைபெற்று. இதில் 1714 மாணவர்கள் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து இயற்கை பாதுகாப்பு பாடத்தை கேட்டு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக 1479 மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடத்தை கவனித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இவர்கள் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இம் மாபெரும்நிகழ்வைஅழகப்பா பள்ளிக்கு "நிரந்தரா கிரியேஷன்ஸ்" என்ற ஈவெண்ட்மேனேஜ்மென்ட் நிறுவனம் சிறப்பாக நடத்தி கொடுத்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் கூறியது,

இந்த உலக சாதனையை படைக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு நீண்ட நாள் கனவாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சாதனையை படைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.

இறுதியாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றுகளை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் பள்ளி தலைவர் சரத்குமாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாதனை படைத்தது தங்களுக்கு பெருமையாக இருந்ததாகவும் இயற்கையை பாதுகாப்பது குறித்து நிறைய விஷ்யங்களை கற்றுக் கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.