திருப்பதியில் பிரிட்டன் நபருக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ்
இந்தியா வந்திருந்த பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் Culley Clive bryant என்பவர் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையிலும் நெகட்டிவ் என்று வந்ததை அடுத்து, தற்போது அவர் அகமதாபாத் வழியாக பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் மூலம் பிரிட்டன் செல்ல அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் புறப்பட்ட அவர், இந்தியாவிற்கும் திருப்பதியில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தார்.