கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்

கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்
கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்
கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்

கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 

சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் மறைவையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து துக்கத்தில் பங்கெடுத்தனர்.


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், அனில் கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர் எஸ்.பி.பி. மறைந்து விட்டார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றபோது எனக்கு விருப்பமான பாடலின் சில வரிகளை தனியாக பாடி காட்டினார். அந்த நாளை எப்போதும் மறக்க மாட்டேன். அதே போல் இன்னொரு முறை அவரிடம் இருந்து பாடல் கேட்க ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாக இருக்கப்போகிறது’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.