ராஜூ அனுப்பிய நோட்டீசால் காணாமல் போகும் சிதம்பரம், சிக்கலில் ஜெய்ஹிந்த் விலாஸ்..!
ராஜூ அனுப்பிய நோட்டீசால் காணாமல் போகும் சிதம்பரம், சிக்கலில் ஜெய்ஹிந்த் விலாஸ்..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் "தெய்வமகள்".
இதில், முன்னணி கதாபாத்திரங்களில் சத்யாவாக வாணி போஜனும், பிரகாஷாக கிருஷ்ணாவும், மிரட்டலான வில்லியாக அண்ணியார் காயத்ரி கதாபாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பாவும் நடிக்கிறார்கள்.
குடும்பங்களின் பேராதரை பெற்ற இந்த தொடரில், ஜெயிலில் இருந்து கொண்டு நம்பியின் மூலம் ஜெய்ஹிந்த் விலாசுக்கு எதிராக தான் நினைத்ததை காயத்ரி சாதித்து வருகிறார்.
நம்பியின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவிக்கும் ராகினி குடும்பத்தை தொடர்ந்து ராஜூவும் தன் தந்தை சிதம்பரத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்ப, மனம் உடைந்து போகும் சிதம்பரம் காணாமல் போக, மறுபுறம் சிதம்பரத்திடம் இருந்து ஜெய்ஹிந்த் விலாஸ் சொத்தை அமைச்சர் அபரிக்க திட்டம் தீட்ட அடுத்த என்ன நடக்கப்போகிறது. இந்த பிரச்சனைகளை பிரகாஷ், சத்யா எப்படி தீர்த்து வைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.