கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே என கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு .க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  ‘’தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும்,  மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவருமான அன்புத்தோழர்  கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.  கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!’’என்று வாழ்த்தி இருக்கிறார்.