இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோக்குள் அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டில் விளக்கம்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோக்குள் அனுமதிக்க முடியாது என ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பொருட்களை எடுக்கவும், தியானம் செய்யவும் அனுமதிக்கக்கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். ஒருநாள் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ திட்டவட்டமாக கூறியுள்ளது.