திருவொற்றியூர் மண்டலத்தில் மாநகராட்சி பகுதி சபை கூட்டம்: பொதுமக்கள் குறைகளை தெரிவித்தனர்

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டுக்குட்பட்ட ஜாண்டவர் தெருவில், மாநகராட்சி பகுதி சபை கூட்டம், மாமன்ற உறுப்பினர் கவிகணேசன் தலைமையில் நடைபெற்றது. பகுதி குழு தலைவர் ரகு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிநீர் வழங்கல் வாரியம், மின்சாரத்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் கலந்துரையாடினர். அப்போது, குடிநீர் குழாய் இணைப்பு, குப்பை அகற்றுதல், சாலை சீரமைத்தல் மற்றும் மின்சார வாரியம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.

இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் கவிகணேசன் உறுதி அளித்தார். கூட்டத்தில், மாநகராட்சியின் செயல் திட்டங்கள், குப்பையை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் எப்படி வழங்குவது மற்றும் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு போன்ற பல்வேறு காணொளி காட்சிகள் அதிநவீன திரையில் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மின்வாரிய உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், எம்.வி.குமார், சைலஸ், பொதுநல ஆர்வலர்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.