பாதிரிவேடு பகுதியில் திமுகவின் இரண்டாண்டு சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம்
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், பாதிரிவேடு பேருந்து நிலையம் அருகே திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மணிபாலன், அவைத்தலைவர் ஜோதிலிங்கம், உதயகாந்தா அம்மாள், திருஞானம், பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகர், வெங்கடாஜலபதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோகன்பாபு, லோகேஷ், ஆனந்தகுமார், பாதிரிவேடு வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரச்சார கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் ஈரோடு இறைவன் கலந்து கொண்டு இரண்டாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை எடுத்துக் கூறி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உமாமகேஸ்வரி, மூர்த்தி, ரமேஷ், மஸ்தான், ஏசுரத்தினம், பரத்குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகளும், அணிகளின் அமைப்பாளர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவஇளங்கோ, மகேந்திரன், கருணாகரன் ஆகியோர் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.