பட்டிமன்றம்

பட்டிமன்றம்
பட்டிமன்றம்
பட்டிமன்றம்

பட்டிமன்றம்

உலகெங்கும் உள்ள தமிழ் சமூக மக்கள் விரும்பிய ரசிக்கும் நிகழ்ழ்சிகளின் முதன்மையாக இருப்பது பட்டிமன்ற நிகழ்வுகள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்காக லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் இணைந்து ஒரு மாபெரும் பட்டிமன்றத்தை சிங்கபூரில் வெற்றிகரமாக நடத்தியது. வருடம் தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு வருந்தும் படி உள்ளதா..? வாழ்த்தும் படி உள்ளாதா..? என்ற தலைப்பில்  பிரபல எழுத்தாளர்.திரு.பழகருப்பையா தலைமையில் தமிழகத்தை சேர்ந்த திரு.ரவிக்குமார், திருமதி.சந்தாமணி மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த திரு.கண்ணன் சேஷாத்திரி, திரு.தமீம் அன்சாரி திருமதி.கங்கா மற்றும் அர்ஜீன் நாராயணன்  ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை ட்ரெடிங் மற்றும் SGD கனெக்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த பட்டிமன்ற நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடதக்கது இந்த சுவராஸ்யமான பட்டிமன்றம் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 15 காலை 9:00 ஒளிபரப்பாக இருக்கிறது