லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள்  தகவல்
லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

பாட்னா: பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் நிறுவனரும், பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் , 2017-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதனால், லாலு பிரசாத்தைக் காண அவரது மகனான தேஜஸ்வி நேரில் விரைந்துள்ளார்.

சமீபத்தில் பீஹாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவானது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பிறகு தற்போதுதான் தேஜஸ்வி, தனது தந்தை லாலு பிரசாத்தை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.