சங்கரன்கோவில் அடுத்த மைப்பாறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பட்டாசு ஆலையை சுற்றி பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் தீயில் எரிந்தன

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மைப்பாறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையை சுற்றி பயிரிடபட்டு அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீ பிடித்து பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீவிபத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள தேட்டம் சேதமடைந்தது. அறுவடை செய்த மக்காச்சோளத்தில் பிடித்த தீ அருகில் இருந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பரவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் தீயனைப்புத்துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை கட்டடங்கள் அனைத்தும் இடிந்து நாசமானது.

இந்த விபத்தில் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.