திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை மதம் பிடித்து மோதி கொண்டதால் பரபரப்பு: அலறி ஓடிய மக்கள்
            திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை மதம் பிடித்து மோதி கொண்டதால் பரபரப்பு: அலறி ஓடிய மக்கள்
கேரளா: கேரளா மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவில் 2 யானைகளுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளமாநிலம் திருச்சூரில் நேற்று இரவு ஆறாட்டு பூரா பூரம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் பிரிந்து செல்லும் நிகழ்வை கான ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில் அலங்கரித்து அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்தது.
இரண்டு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்ட யானைகளை அதன் பாகன்களும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். யானைகள் துரத்தும் போது ஓட்டம் பிடித்த பொதுமக்களில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். பூரம் திருவிழாவில் யானைகளுக்கு மதம் பிடித்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        