குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”

குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”
குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”
குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”
குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”
குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”

குடும்பங்கள் கொண்டாடும் “நாயகி”

 

“நாயகி” தொடருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு

 

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “நாயகி” நெடுந்தொடர். இந்த தொடரின் கதை, பெண்களை மையப்படுத்தி இருப்பதால் இந்த தொடருக்கு தமிழ் மக்களிடையே மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் அனைத்து தளங்களிலும் சாதித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரமோ, அவர்களை பெரிதாக கொண்டாடுவதோ இல்லை. ஆனால், இந்தத் தொடரில் அதையும் தாண்டி பல விறுவிறுப்பான விஷயங்களும் இடம்பெற்றுள்ளது.

 

பெண்களை மையப்படுத்தி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், தற்போது பல்வேறு திருப்பங்களுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

 

ச.குமரன் இயக்கியிருக்கும் இந்த தொடர் ஆனந்தி, கண்மணி மற்றும் சற்குணம் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்தி செல்கிறது. இதில் ஆனந்தி கதாபாத்திரத்தில் முதல் 146 அத்தியாயத்தில் விஜயலட்சுமியும், பின்னர் வித்யா பிரதீப்பும் நடித்துள்ளனர்.

 

இதில் ஆனந்திக்கு ஜோடியாக திருமுருகன் என்கிற கதாபாத்திரத்தில் திலீப் ராயன் நடிக்க, சற்குணம் கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். கண்மணியாக பாப்ரி கோசும், முக்கிய வேடங்களில் மீரா கிருஷ்ணன், சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.