அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாக கால்-கை வலிப்பு நோயாளியின் நினைவாற்றலைப் பாதுகாக்கும் சைபர்நைஃப் சிகிச்சை முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது!

அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாக கால்-கை வலிப்பு நோயாளியின் நினைவாற்றலைப் பாதுகாக்கும் சைபர்நைஃப் சிகிச்சை முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது!
அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாக கால்-கை வலிப்பு நோயாளியின் நினைவாற்றலைப் பாதுகாக்கும் சைபர்நைஃப் சிகிச்சை முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது!

 

 
அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாக கால்-கை வலிப்பு நோயாளியின் நினைவாற்றலைப் பாதுகாக்கும் சைபர்நைஃப் சிகிச்சை முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது!
 
 34 வயதான தடகள விளையாட்டு வீரர் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்
சென்னை, ஜூலை, 22 2021: சென்னையில் உள்ள அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஒரு தடகள வீரருக்கு சைபர்நைஃப் கதிரியக்க அறுவை சிகிச்சை முறை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது நினைவாற்றலைப் பாதுகாக்கப்படுவதுடன் அதே சமயம், மீடியல் டெம்பரல் லோப் எபிலெப்ஸி (MTLE) என்று அழைக்கப்படும் வலிப்பு நோயின் ஒரு மாறுபட்ட வகையில் இருந்து அவருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மென்பொருள் நிபுணராகவும் தடகள விளையாட்டு வீர்ராகவும் உள்ள தாமஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 34 வயதான இளைஞர், 2009-ம் ஆண்டு அவ்வப்போது உணர்வற்ற மயக்க நிலையாலும் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வாலும் பாதிக்கப்பட்டு சிக்கல்களை அனுபவிக்கத் தொடங்கினார். நியூசிலாந்தில் நரம்பியல் நிபுணரிடம் சென்ற அவருக்கு வலிப்புத் தாக்கங்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கினார். இருப்பினும், 2010 முதல் 2015 வரை அவருக்கு பல வலிப்புத்தாக்கங்கள் அதிகமாக இருந்தன. இமேஜிங்கை வெளிப்படுத்தும் அரிய வகை கால்-கை வலிப்பான மீடியல் டெம்பரல் லோப் கால்-கை வலிப்பு (Medial temporal lobe epilepsy -MTLE) என அழைக்கப்படும் இந்த நோய் கால்-கை வலிப்புக்கான எதிர்ப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் தாமஸ்சின் வலிப்புத்தாக்கங்கள், மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கத் தொடங்கின. இறுதியில் நியூசிலாந்தில் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஜனவரி 2021-ல் சென்னை அப்போலோ புற்றுநோய் மையத்தின் மூத்த கதிர்வீச்சு புற்றுநோயியல் மற்றும் சைபர்நைஃப் சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கரை அணுகினார். இங்கு அவருக்கு விரிவான நரம்பியல் உளவியல் மதிப்பீட்டை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கும் முன்பு தாமஸ்-சுக்கு 90 வது சதவிகிதத்தில் காட்சி நினைவக மதிப்பெண்கள் (visual memory scores at 90th percentile) இருந்தன.
அப்போலோ மருத்துவமனைகளின் மூத்த வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் முத்துகனி, ‘’எம்டிஎல்இ (MTLE) என்பது பொதுவான வலிப்பு நோய்களில் ஒன்றாகும் என்றும், வலிப்புத்தாக்கத்திற்கு முந்தைய ஒரு ஒளி உணர்வால் பெரும்பாலும் வகைப்படுத்தப்படுகிறது’’ என்றும் குறிப்பிட்டார். எம்டிஎல்இ மூளையின் டெம்பரஸ் லோபின் உள் பகுதியை பாதிக்கிறது. குறிப்பாக ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியில் நினைவாற்றல் செயல் முறைகள் நடைபெறும் இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மைக்ரோ சர்ஜரி என்பது மருந்து இல்லாமல் எம்டிஎல்இ-வுக்கு செய்யும் முதல் சிகிச்சை வாய்ப்பாகும். இருப்பினும், அறுவை சிகிச்சை நினைவுத் திறனுக்கு சில ஆபத்துகளை ஏற்படுத்தும். தாமஸ் தனது நினைவாற்றலைப் பாதுகாப்பதை முக்கியமாகக் கருதினார். அத்துடன் நம்பிக்கைக்குரிய மாற்று சிகிச்சை முறையான சைபர்நைஃப் ரேடியோ சர்ஜரி சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் வலிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்து நினைவையும் பாதுகாக்கலாம் என்று அவருக்கு கூறப்பட்டது.
சைபர்நைஃப் என்பது உடலில் ஊடுருவல் அல்லாத சிகிச்சை வாய்ப்பாகும். இது எக்ஸ் ரே (எக்ஸ்-கதிர்கள்) / காமா கதிர்களை சிறந்த (சப் எம்எம்) துல்லியத்துடன் வழங்குவதை உள்ளடக்கிய முறையாகும். இது ஒரு நாள் சிகிச்சை நடைமுறை என்பதுடன் ஒரே அமர்வில் 30 நிமிடத்தில் நிறைவு செய்யப்படுகிறது.
டாக்டர் சங்கர் இந்த சிகிச்சை குறித்துக் குறிப்பிடுகையில், “ரேடியோ சர்ஜரி எனப்படும் கதிரியக்க சிகிச்சை அனைத்து எம்டிஎல்இ நோயாளிகளுக்கும் மேற்கொள்ளப்படுவது இல்லை. பின்வரும் அம்சங்களுடன் பொருந்தக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதாவது உயர் மட்ட செயல்பாடுகள் கொண்ட இளைஞர்கள், சமூக செயல்பாடுகளைக் கொண்டவர்கள், குறிப்பிட்ட பணி செய்வோர், சிகிச்சைக்கு முன்பு சில நரம்பியல் உளவியல் குறைபாடு கொண்டவர்கள் போன்றோருக்கு மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்க அறுவை சிகிச்சை நல்ல செயல்திறனை வழங்குகிறது (கிட்டத்தட்ட 70 சதவீத ஏங்கல் வகுப்பு 1 பதில் - 70% Engel class 1 response). அறுவை சிகிச்சை முறையுடன் ஒப்பிடும்போது சிறந்த நினைவக பாதுகாப்பை இது வழங்குகிறது.” என்றார்.
தாமஸ்-சுக்கான மருந்துத் தேவைகள் இப்போது மிகவும் குறைந்த அளவுகளிலேயே உள்ளன. மேலும் புதிய வலிப்புத் தாக்கங்கள் எதுவும் இல்லை. அவர் புத்துணர்ச்சியடனும் நல்ல ஆற்றலுடனும் தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் பற்றி:
அப்போலோ மருத்துவமனை, டாக்டர் பிரதாப் சி ரெட்டி-யால் 1983-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையாக சென்னையில் தொடங்கப்பட்டது. ஆசியாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ சுகாதார குழுமமாகத் திகழும் அப்போலோ, தற்போது 71 மருத்துவமனைகளில் 12,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 3300-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 90 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 150 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 110-க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களும், 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. ஆராய்ச்சி அறக்கட்டளையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், தொற்றுநோயியல், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு [global Clinical Trials, epidemiological studies, stem cell & genetic research] உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில், மருத்துவ கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதில் முதன்மையான நிறுவனமாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை [Proton Therapy Centre] சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை [commemorative stamp] வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த மருத்துவ கண்டுபிடிப்புகளில் தனது முதன்மைத்துவத்தை தொடர்ந்து தக்க வைத்துவருவதோடு, உலகத்தரத்திலான மருத்துவ சேவைகளையும், அதிநவீன தொழில்நுட்பங்களையும் மேற்கொண்டு வருகிறது. மிகவும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் நம் நாட்டின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் தொடர்ந்து முக்கிய இடத்தை தக்கவைத்திருக்கிறது.