இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்
            இலவச பூஸ்டர் டோஸ் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். 18 முதல் 59 வயதினருக்கு இலவசமாக ஒன்றிய அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்ததை பாராட்டுகிறேன். ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு அதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதில் தெரிவித்திருந்தார்.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        